என் மலர்
நீங்கள் தேடியது "இடியுடன் கூடிய கனமழை"
- ஈரோடு மாநகர் பகுதியில் சாலைகளில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
- மாவட்டத்தில் அதிகபட்சமாக கோபியில் 42.4 மில்லி மீட்டர் மழை பதிவானது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கலந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அரை மணி நேரம் மழை பெய்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் மதியம் 2 மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. சுமார் அரை மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அதன் பிறகும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் சாலைகளில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். இதுபோல் கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
பவானி, கவுந்தப்பாடி குண்டேரிபள்ளம், வரட்டு பள்ளம் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கோபியில் 42.4 மில்லி மீட்டர் மழை பதிவானது. இந்த திடீர் மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு: கோபி-42.4, பவானி-32, ஈரோடு-30, கவுந்தப்பாடி-24.2, குண்டேரிபள்ளம்-8.20, வரட்டுபள்ளம்-7.






