என் மலர்
நீங்கள் தேடியது "Fisherman’s Missing"
காரைக்கால்:
கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடிக்க சென்ற, காரைக்கால் மேடு மீனவர்கள் 7 பேர் மாயமானது குறித்து, இந்திய கடலோர காவல் படையினர் தீவிரமாக தே டிவருகின்றனர்.
காரைக்காலை அடுத்த காரைக்கால் மேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது40). இவருக்கு சொந்தமான பைபர் படகில், கடந்த 18-ந் தேதி கிருஷ்ணமூர்த்தி, அதே கிராமத்தை சேர்ந்த பாலாஜி (36), முருகானந்தம் (40), வேலுச்சாமி (55), செந்தில் (38) மற்றும் கீழக்கசாக்குடி மேட்டை சேர்ந்த ராமசாமி (52), ராஜ்குமார் (30) ஆகிய 7 மீனவர்கள் வழக்கம்போல், காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
அவர்கள் 7 பேரும் கோடியக்கரை அருகே மீன் பிடித்து கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு மீனவர்களின் இருப்பிடம் மற்றும் செல்போன் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காரைக்கால் மேடு மீனவ பஞ்சாயத்தார்கள் காரைக்கால் கடலோர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து இந்திய கடலோர காவல் படை சென்னை தலைமையகத்துக்கு தகவல் தெரிவிக்கப் பட்டதையடுத்து இந்திய கடலோர காவல் படையினர் மாயமான 7 மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.






