என் மலர்
நீங்கள் தேடியது "அப்போலோ மருத்துவ குழு"
- மருத்துவ நோயறிதலுக்கான திறன்களில் ஒரு புதிய தரஅளவுகோலை இது நிறுவும்.
- ஐந்து முக்கியமான ஆய்வகப் பிரிவுகளை உள்ளடக்கியதாக செயல்படும்.
அப்போலோ டயக்னாஸ்டிக்ஸ், சென்னை மாநகரில் இன்று அதன் டிஜி-ஸ்மார்ட் மைய மேற்கோள் ஆய்வகத்தை (CRL) இன்று தொடங்கியிருக்கிறது.
நோயாளிகளின் சிகிச்சை பராமரிப்பை மேம்படுத்துவதற்கு பிழைகள் இல்லாத இயக்கச் செயல்பாடுகளுடன் நோயறிதலுக்கான காலஅளவை மிகப்பெரிய அளவில் விரைவுபடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் முற்றிலும் தானியக்கச் செயல்பாடு கொண்ட ஒரு ஆய்வகம் இது.
ஆய்வகத்திற்கு வரும் மாதிரிகளை பரிசோதித்து முடிவுகளை அறிவிக்கும் காலஅளவில் (TAT) 60% குறைப்பது என்ற நோக்கம் கொண்ட இந்த முன்னோடித்துவ முன்னெடுப்பானது மிக நவீன தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துகிறது.
நோயாளிகளின் அறிக்கைகளை மிக விரைவாகவும், துல்லியமாகவும் வழங்குவதன் வழியாக மருத்துவ நோயறிதலுக்கான திறன்களில் ஒரு புதிய தரஅளவுகோலை இது நிறுவும்.
45,000 சதுர அடி பரப்பளவுள்ள இந்த மிக நவீன ஆய்வகமானது, மருத்துவ வேதியியல், நொதி எதிர்ப்பு மதிப்பீடு, சீரவியல், இரத்தவியல் மற்றும் ஹெமஸ்டாசிஸ் என்ற ஐந்து முக்கியமான ஆய்வகப் பிரிவுகளை உள்ளடக்கியதாக செயல்படும்.
ஒருங்கிணைக்கப்பட்ட, டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்படுகிற மற்றும் முற்றிலும் தானியக்க செயல்பாடு கொண்ட மைய ஆய்வகமாக இது இருக்கும். மேம்பட்ட ரோபோடிக்ஸ், உயர் துல்லிய திறன் கொண்ட கேமராக்கள், சிறப்பான அல்கோரிதம்கள் மற்றும் எந்திரக் கற்றல் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த நேர்த்தியான ஒருங்கிணைவு, ஆய்வு பரிசோதனை செயல்பாடுகளில் மேம்படுத்தும், பிழைகளை பெருமளவு குறைக்கும் மற்றும் மருத்துவ விளைவுகளை கணிசமாக உயர்த்தும்.
டிஜி-ஸ்மார்ட் லேப்-ன் மிக நவீன தானியக்க செயல்பாடானது, ஒவ்வொரு நாளும் 100,000-க்கும் அதிகமான மாதிரிகள் மிக துல்லியமாக ஆய்வு செய்யப்படுவதை அனுமதிக்கும்.
இதன் மூலம் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள வாடிக்கையாளர்களின் தேவைகள் சிறப்பாக பூர்த்தி செய்யப்படும்.
இதுகுறித்து அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்-ன் நிறுவனர் மற்றும் சேர்மன் டாக்டர். பிரதாப் சி ரெட்டி கூறியதாவது:-
நோயறிதல் செயல்பாட்டின் திறமை மற்றும் துல்லியத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை பிரதிநிதித்துவம் செய்வதாக எமது டிஜி-ஸ்மார்ட் லேப் இருக்கும். முன்னோடித்துவ புத்தாக்கத்தின் முதல் வரிசையில் அப்போலோ இருந்து வரும் நிலையில் இந்த டிஜி-ஸ்மார் லேப்-ன் உண்மையான ஆற்றல் அதன் முழுமையான, விரிவான அணுகுமுறையில் அடங்கியிருக்கிறது.
எமது பரிசோதனையக செயல்பாடுகளை சீராக்கி நெறிப்படுத்த டிஜி ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவை நாங்கள் பயன்படுத்துகிறோம்.
இதன் மூலம் துல்லியத்தின் மிக உயர்ந்த அளவுகள் எட்டப்படுவதை நாங்கள் உறுதி செய்கிறோம். ஐந்து மிக முக்கிய ஆய்வக பிரிவுகளை மேம்பட்ட தானியக்க செயல்பாடுகளின் மூலம் நேர்த்தியாக ஒருங்கிணைப்பதன் வழியாக விரைவான மற்றும் அதிக துல்லியமான பரிசோதனை முடிவுகளை இந்த ஆய்வகம் வழங்குகிறது.
நோயாளிகளுக்கு சிறப்பான விளைவுகள் கிடைக்குமென்பதே இதன் நேரடி அர்த்தமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த புத்தாக்க செயல்திறன் கொண்ட ஆய்வகமானது சுகாதாரப் பராமரிப்பு தொழில்துறையில் ஒரு மிக முக்கிய முன்னேற்ற நடவடிக்கையாக இருக்கிறது.
நோயாளிகளின் சிகிச்சை பராமரிப்பை மேம்படுத்தவும், நோயறிதல் செயல்முறைகளை சீரமைத்து நெறிப்படுத்தவும் மிக நவீன தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவதில் அப்போலோ டயக்னாஸ்டிக் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பையும், பொறுப்புறுதியையும் இது அடிக்கோடிட்டு காட்டுகிறது.
- விபத்தில் மரணத்தின் விளிம்புக்கு சென்ற நபரை காப்பாற்றிய அப்போலோ மருத்துவ குழுவினர்
- கழுத்து எலும்பு முறிவு, கல்லீரல் பாதிப்பு
திருச்சி:
காரைக்குடி பகுதியில் கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய விஜயகுமார்( வயது 40) திருச்சி அப்போலோ மருத்துவமனையில் கடந்த மார்ச் 10ம் தேதி சேர்க்கப்பட்டார். உடலெங்கும் ஏராளமான காயங்கள். கை மற்றும் கால்களில் பெரும்பகுதி வெந்து போயிருந்தது. இடுப்பையும் கழுத்தையும் அசைக்க முடியாத நிலையில் இருந்தார். கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்புக்கே சென்ற அவரை காரைக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து திருப்பி இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.
பின்னர் எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கழுத்து எலும்பு முறிந்து இருப்பதும், முன் மூளையில் ரத்தக் கட்டுகள் இருப்பதும் தெரிய வந்தது.
அடுத்தடுத்த பரிசோதனைகளில் இடது கை எலும்பு, இடது இடுப்பு எலும்பு, இடது தொடை எலும்பு ஆகியவற்றில் முறிவு இருப்பது தெரிய வந்தது. மேலும் கல்லீரல் பாதிப்பு காரணமாக இரத்த உறையும் தன்மை குறைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கல்லீரல் பாதிப்பும் இருந்தது. பின்னர் ரத்த அழுத்தமும் சுவாசமும் ஓரளவு சீரான பின்னர் இடது தொடை எலும்புக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை டாக்டர்கள் பாலசுப்பிரமணியன் மற்றும் அருண் கீதையன் குழுவினர் மேற்கொண்டனர்.
அது மட்டுமல்லாமல் தீக்காயங்களில் கரும் பூஞ்சை வளர்ச்சி கண்டறியப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள டாக்டர்கள் பரணிதரன், விக்னேஷ் முத்து வெங்கடேஷ், குமார் சிறுநீரகப் பிரிவு மருத்துவர் பாலமுருகன் கிருமி தொற்று சிகிச்சை நிபுணர் வசந்த் ஆகியோரின் தொடர் முயற்சிகளுக்கு பின்னால் நோயாளி ஓரளவுக்கு தொற்றிலிருந்து தேறியுள்ளார்.
கடைசியாக கழுத்து எலும்பு முறிவுக்கான சிகிச்சை டாக்டர்கள் மயிலன், கெவின், ஜோசப் குழுவினரால் வெற்றிகரமாக நடந்தது
இதை எடுத்து 6 வாரங்களுக்கு பிறகு விஜயகுமார் உட்கார வைக்கப்பட்டார். மரணத்தின் விளிம்புக்கே சென்ற அவரை அப்போலோ மருத்துவ குழுவினர் காப்பாற்றி விட்டதாக விஜயகுமார் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பின்போது திருச்சி அப்பல்லோ ஆஸ்பத்திரி நிலைய தலைவர் சாமுவேல் கூறும் போது, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சாலை விபத்துகள் இருதய அவசர நிலைகள் பக்கவாதம் அல்லது விஷம் போன்ற எந்த ஒரு அவசரத்தில் கையாளுவதற்கு போதுமான படுக்கை கட்டமைப்பு வசதிகள் இங்கு உள்ளன என்றார். இதில் மருத்துவ அதிகாரி சிவம், மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவு பொது மேலாளர் மணிகண்டன் , துணைப் பொது மேலாளர் சங்கீத் மற்றும் பலர் உடன் இருந்தனர்.






