என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்"

    • ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்தது
    • 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம் வழங்ககோரி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் கபீர்தாஸ் தலைமை தாங்கினார்.

    துணை தலைவர் லோகநாதன் வரவேற்றார்.செயலாளர் ஆறுமுகம் கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் வருவாய் துறையில் பணிபுரயும் கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் ரூ.15,700 வழங்கிட வேண்டும்.

    அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல கிராம உதவியாளர்களுக்கு பொங்கல் போனஸ் சதவீத அடிப்படையில் குறைந்த பட்சம் ரூ.3,000 வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சரவணராஜ், ரவி மற்றும் ஆற்காடு, கலவை, நெமிலி, அரக்கோணம், சோளிங்கர் தாலுக்கா தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் உறுப்பினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • 10 சதவீத ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டுகோள்
    • அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தல்

    திருப்பத்தூர்:

    தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட மாநாடு திருப்பத்தூர் ரெயில்வே ஸ்டேஷன்ரோட் டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது .

    மாவட்ட தலைவர் ராசு தலைமை தாங்கினார் . சேகரன் , வேலாயுதம் முன்னிலை வகித்தனர் . மாநில செயற்குழு உறுப் பினர் கார்மேகம் வரவேற்றார் . ஜவர்கலால் நேரு தொடக்க உரை ஆற்றினார் . சிறப்பு அழைப்பாளராகமாநில செயலாளர் குரு சந்திரசேகரன் , மாநில பொதுச்செயலாளர் பி.கிருஷ்ண மூர்த்தி , கலந்து கொண்டு பேசினார்கள் .

    மாவட்ட செயலாளர் ஏ.ஞானசேகரன் , தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க மாவட்ட தலைவர் அருள்மொழிவர்மன் காசி , ரங்கன் , கேசவன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினார்கள் . முடிவில் மாவட்ட இணை செய லாளர் இளங்கோவன் நன்றி கூறினார் .

    கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் , இதற் காகதமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பலகட்ட போராட்டங்கள் நடத்துவது , ஓய்வூதியர்க்கு 10 சதவீத ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும் , ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் திருப்பத்தூரில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .

    ×