என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சரிடம்"
- ஏற்காட்டில் உள்ள நாகலூர் ஊராட்சி ஜெ.நகர் அருகிலுள்ள மாதிரிப்பள்ளி மற்றும் நாகலூரில் உள்ள அரசுப்பள்ளியில் ஏராளமான மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
- இம் மாணவ-மாணவிகள் ஏற்காடு மலையில் உள்ள 70 கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
ஏற்காடு:
ஏற்காட்டில் உள்ள நாகலூர் ஊராட்சி ஜெ.நகர் அருகிலுள்ள மாதிரிப்பள்ளி மற்றும் நாகலூரில் உள்ள அரசுப்பள்ளியில் ஏராளமான மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இம் மாணவ-மாணவிகள் ஏற்காடு மலையில் உள்ள 70 கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இம்மாணவ- மாணவிகள் தினமும் பஸ்களில் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்து பள்ளிக்கு செல்கின்றனர். மேலும் பலர் நடந்தும் பள்ளிக்கு செல்கின்றனர். ஏற்கனவே பஸ் வசதி இருந்தும் இந்த நிலை ஏற்படுகிறது.
என்வே மாணவ- மாணவிகள் கஷ்டத்தை போக்க அதற்கு ஏற்றவாறு பஸ் வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என நேற்று ஏற்காடு மலை கிராம பள்ளியில் ஆய்வு செய்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் மனு கொடுக்கப்பட்டது.
இந்த மனுவை நாகலூர் ஒன்றிய கவுன்சிலரும் வனக்குழு உறுப்பினருமான சின்னவெள்ளை கொடுத்தார். மேலும் அதில், வேலூர் ஊராட்சியில் உள்ள நீடூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி, சொனப்பாடி கிராமத்திலுள்ள அரசுப்பள்ளி கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அதை சரி செய்து தருமாறு கேட்டுக்கொண்டார்.






