என் மலர்
நீங்கள் தேடியது "தலைமை மருத்துவர்"
- மருத்துவர்களின் சங்கம் சார்பில் திண்டுக்கல்லில் 2 மாநாடு நடைபெற்றது.
- சிறந்த ஆய்வறிக்கையாக தேர்வு செய்யப்பட்டு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
உடுமலை:
திண்டுக்கல் மாவட்ட எலும்பு முறிவு மூட்டு நோய் சிகிச்சை மருத்துவர்களின் சங்கம் சார்பில் திண்டுக்கல்லில் 2 மாநாடு நடைபெற்றது.
இதில், தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டு, எலும்பு முறிவு மற்றும் மூட்டு நோய் பற்றிய ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்தனர். இதில், உடுமலையைச் சேர்ந்த எலும்பு முறிவு மூட்டு நோய் சிகிச்சை மையத்தின் தலைமை மருத்துவர் சுந்தர்ராஜன் கலந்துகொண்டு, எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்த பின், எலும்புகள் கூடாமல் இருப்பது பற்றியும், அதை சரி செய்வது எப்படி என்பது பற்றியும் அறிக்கைசமர்ப்பித்தார்.
இது சிறந்த ஆய்வறிக்கையாக தேர்வு செய்யப்பட்டு அவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. இந்த விருதை மூட்டு நோய் சிகிச்சை மருத்துவர்கள் சங்கத் தலைவர் ரமேஷ் வழங்கினார். மருத்துவ சங்க மாநிலச் செயலாளர் நவீன்தக்கார் மற்றும் பல்வேறு மருத்துவர்கள் டாக்டர் சுந்தர்ராஜனுக்கு பாராட்டு தெரிவித்தனர்.






