என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ண்ணாரி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை"

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    • ஆடிமாதம் அம்மனுக்கு வழிபாடு செய்ய உகந்த மாதமாகக் கருதப்படுகிறது.

    கோத்தகிரி

    ஆடிமாதம் அம்மனுக்கு வழிபாடு செய்ய உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. இதையொட்டி கோத்தகிரி கடைவீதியில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் ஆடி மாத முதல் நாளான கடந்த 17-ந் தேதி தொடங்கியது. சஷ்டி நாளான காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. இந்த பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் மகளிர் வழிபாட்டுக் குழுவினர் செய்துவருகின்றனர்.

    ×