என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருநங்கை கைது"

    • திருநங்கை கைது
    • ஒரு ரூபாய் நாணயம் கொடுங்கள் உங்களுக்கு ஆசீர்வதித்து தருகிறேன் என கூறினார்.

    பீளமேடு:

    கோவை விமான நிலையம் அருகில் உள்ள ஜி.ஆர்.ஜி பகுதியைச் சேர்ந்தவர் மரிய பிரதீப் (வயது 42).

    இவர் சம்பவத்தன்று மதியம் தனது மனைவியுடன் கொடிசியா வளாகம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது மகனை அழைப்பதற்காக காரில் சென்று அங்கு நின்றிருந்தார். அப்போது அவரது காரின் அருகே மொபட்டில் 2 திருநங்கைகள் வந்தனர். அதில் ஒரு திருநங்கை மரிய பிரதீப்பிடம் சென்று பணம் கேட்டுள்ளார்.

    மரிய பிரதீப் தனது பர்ஸில் இருந்து ரூ.10 எடுத்துக் கொடுத்தார். அப்போது அவர் ஒரு ரூபாய் நாணயம் கொடுங்கள் உங்களுக்கு ஆசீர்வதித்து தருகிறேன் என கூறினார். இதை அடுத்து மரிய பிரதீப் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து

    கொடுத்தார். அவர் அதை வாங்கி ஆசீர்வதிப்பது போல நடடித்து மரிய பிரதீப்பின் பர்சில் வைத்து விட்டு அங்கு காத்திருந்த மற்றொரு திருநங்கையுடன் சென்றார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது அவரது பர்சில் இருந்த ரூ.8 ஆயிரம் மாயமாகி இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மரிய பிரதீப் அந்த திருநங்கைகளை தேடினார். ஆனால் அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து மரிய பிரதீப் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கவுண்டம்பாளை யம் சக்தி நகரை சேர்ந்த இள வஞ்சி (40) என்ற திருநங்கை பணத்தை திருடியது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் இளவஞ்சியை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.3 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். 

    ×