search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு"

    • வத்தலக்குண்டு வெற்றிலை நகர்லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
    • ரூ.20 ஆயிரம் மதிப்பிலான அரிசி மற்றும் பலசரக்கு பொருட்கள் வழங்கும் சேவை திட்டங்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு வெற்றிலை நகர்லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. விழாவுக்குதலைவர் குணபாலன் தலைமை வகித்தார்.புதிய தலைவர் மனோ தீபன், செயலாளர் கமலக்கண்ணன், பொருளாளர் மனோகரன்ஆகியோருக்கு முன்னாள் ஆளுநரும் கேட் ஏரியா லீடருமான பாண்டியராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் ஆளுநர் மணிகண்டன் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான அரிசி மற்றும் பலசரக்கு பொருட்கள் வழங்கும் சேவை திட்டங்களை தொடங்கி வைத்தார்.மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    மண்டல தலைவர் டாக்டர் அண்ணாதுரை ,வட்டாரத் தலைவர் அருண்குமார், பட்டய தலைவர் வீரராஜ், பட்டய செயலாளர் ஓவிய சுந்தரம்ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர். புதிய தலைவர் மனோ தீபன் ஏற்புரை வழங்கினார். கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    வெற்றிலை நகர் கிளப் நிர்வாகியும்விரிவாக்க தலைவருமான திருமணி தொகுத்து வழங்கினார். விழாவில் வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர் சிதம்பரம், துணைத் தலைவர் தர்மலிங்கம், நாடார் உறவின்முறை நிர்வாகி மதியழகன், ரோட்டரி சங்க தலைவர் இளஞ்செழியன், வெற்றிலை நகர் லயன்ஸ்கிளப் நிர்வாகிகள் பாண்டியன் , சுப்பிரமணி, கிருஷ்ணன், ஞானவேல், ராஜா முகமது உள்பட ஏராளமானோர்கலந்துகொண்டனர். முடிவில் புதிய செயலாளர் கமலக்கண்ணன் நன்றி கூறினார்.

    ×