என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டை அணை"

    • மோட்டை அணையானது மொத்தம் 27 அடி கொள்ளளவு கொண்டது.
    • மோட்டை அணையின் மூலம் 22 குளங்கள் வழியாக 366.15 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசனம் பெற்று வருகிறது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் செங்கோட்டையில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் மோட்டை அணை அமைந்துள்ளது. இந்த அணையானது மொத்தம் 27 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் மூலம் 22 குளங்கள் வழியாக 366.15 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசனம் பெற்று வருகிறது.

    மேலும் மோட்டை, தவணை, காடுவெட்டி, ஊரபத்து சுற்று வட்டாரப்பகுதிகளில் 100 ஏக்கர் நிலங்கள் மறைமுக பாசனமாக பயன் பெற்று வருகின்றன. இந்த பகுதியில் நிறுவப்பட்ட முதல் அணை என்ற பெருமையை மோட்டை அணை பெற்றுள்ளது.

    கடந்த சில நாட்களாக மேற்குதொடர்ச்சி அடிவார பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து முழு கொள்ளவை எட்டி உபரி நீர் தற்போது வெளியேறி வருகிறது. இதனால் பிசான சாகுபடிக்கான பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் பெய்த தொடர் மழையால் மோட்டை அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
    • மோட்டை அணையானது சுமார் 1.35 சதுர மைல் நீர்பிடிப்பு பகுதியை கொண்டது. சுமார் 27 அடி கொள்ளளவு கொண்டது.

    நெல்லை:

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் செங்கோட்டையில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மோட்டை அணை.

    இந்த அணையானது சுமார் 1.35 சதுர மைல் நீர்பிடிப்பு பகுதியை கொண்டது. சுமார் 27 அடி கொள்ளளவு கொண்டது.

    இந்த அணையின் மூலம் 22 குளங்கள் வழியாக 366.15 ஏக்கர் நிலங்கள் நேர்முகமாக பாசனம் பெற்று வருகிறது. மேலும் மோட்டை, தவணை, காடுவெட்டி, ஊரபத்து சுற்று வட்டார பகுதிகளில் 100 ஏக்கர் நிலங்கள் மறைமுகமாக பாசனமாக பயன்பெற்று வருகிறது.

    தற்போது மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் பெய்த தொடர் மழையால் மோட்டை அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இன்று காலை அணை நிரம்பி வழிந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×