என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் மர்ம சாவு"

    • தாய் போலீசில் புகார்
    • உதவி கலெக்டர் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ஆற்காடு அடுத்த கீழ்விஷாரத்தை சேர்ந்தவர் பிச்சாண்டி, இவரது மகள் பிரியா (23).

    இவரும் லாரி டிரைவரான பாலு என்பவரும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். அம்மூர் அடுத்த ரெட்டியூர் பகுதியில் தனியாக வசித்து வந்தனர்.

    இந்த தம்பதிக்கு 3 வயதில் தஸ்வின், 1 வயதில் பவினேஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது குழந்தை அழும் சத்தம் கேட்டு பாலு எழுந்து பார்த்துள்ளார்.

    அப்போது பிரியா மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உடனடியாக பிரியாவை சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இது பற்றி தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் பிரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் பிரியா இறப்பதற்கான காரணம் என்ன? எப்படி இறந்தார் என்ற விவரம் தெரியாததால், அவரது தாய் ரமா (48) தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும் போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என ராணிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியாவின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் திருமணமாகி 4 வருடங்களே ஆகி இருப்பதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வினோத் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

    • உத்தமபாளையத்தில திருமணமான 45 நாளில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
    • அவர் வரதட்சணை கொடுமை யால் இறந்தாரா? என்று உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஆர்.சி. வடக்குத் தெருவைச் சேர்ந்த சவரிமுத்து மகன் வினித் (வயது 25). கூலித் தொழிலாளி. இவரும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள காசம்பட்டியைச் சேர்ந்த சத்யா (வயது 21) என்பவரும் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

    உத்தமபாளையத்தில் வினித் வீட்டிலேயே சத்யா வாழ்ந்து வந்தார். நேற்று வீட்டில் இருந்து மயங்கி விழுந்து விட்டதாக கூறி சத்யாவை உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவி த்தனர்.

    இது குறித்து சத்யாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவே அவர்கள் உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர். தங்கள் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் கணவர் குடும்பத்தினர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது டாக்டர்கள் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்குதான் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். பரிசோதனை முடிவில் சத்யா எவ்வாறு இறந்தார்? என தெரிய வரும் என்று கூறினர்.

    இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். திருமணமான 45 நாளில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே அவர் வரதட்சணை கொடுமை யால் இறந்தாரா? என்று உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

    ×