என் மலர்
நீங்கள் தேடியது "கரடியை பிடிக்க கூண்டு"
- கொட்டநள்ளி பகுதியில் உள்ள ஜானகி என்பவரின் மளிகை கடையை உடைத்து பொருட்களை சேதம் செய்து உள்ளது.
- ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து சாலை மறியல் செய்து பஸ்சை சிறைபிடிக்க முயன்றனர்.
அரவேணு:
கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன.
இந்தநிலையில் கோத்தகிரி நெடுகுளா கொட்டநள்ளி கிராமத்தில் 150 வசித்து வருகின்றனர். கடந்த 15 நாட்களாக இப்பகுதியில் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் உலா வருகிற நிலையில், கொட்டநள்ளி பகுதியில் உள்ள ஜானகி என்பவரின் மளிகை கடையை உடைத்து பொருட்களை சேதம் செய்து உள்ளது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவ்வப்போது வனத்துறையினர் வந்து செல்கிறார்கள். இதனால் ஊர் மக்கள் தினந் தோறும் இரவு நேரங்களில் தீ மூட்டி கரடியை விரட்டி வந்துள்ளனர்.
இரவு மீண்டும் மளிகை கடையை உடைத்து பொருட்களை சேதப்படுத்தியதால் காலையில் ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து சாலை மறியல் செய்து பஸ்சை சிறைபிடிக்க முயன்றனர்.
தகவல் அறிந்த கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார், வனத்துறையினர் மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் உடனடியாக கூண்டு வைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.பின்னர் கரடியை பிடிக்க வனத்துறையினர் மூலம் கூண்டு வைக்கப்பட்டது.






