என் மலர்
நீங்கள் தேடியது "நாவல் பழ சீசன்"
- கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நிற்கும் நாவல் மரங்களில், நாவல் பழங்கள் அதிகளவில் காய்த்து தொங்குகின்றன.
- நாங்கள் ஒரு நாளைக்கு காலை முதல் மாலை வரை 50 கிலோ முதல் 60 கிலோ வரை நாவல் பழங்களை பறிக்கிறோம்.
அரவேணு:
கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் மலை நாவல் மரங்கள் அதிகளவில் உள்ளன. ஜூன், ஜூலை மாதங்களில் இங்கு மலை நாவல் பழ சீசன் தொடங்கும்.
இந்த ஆண்டுக்கான மலை நாவல் பழ சீசன் தற்போது தொடங்கியுள்ளது. கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நிற்கும் நாவல் மரங்களில், நாவல் பழங்கள் அதிகளவில் காய்த்து தொங்குகின்றன. இதனை நாவல் பழ தொழிலாளர்கள் பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடைகளில் நாவல் பழம் ரூ.200 விற்பனையாகி வருகிறது.
இதுகுறித்து நாவல் பழம் பறிக்கும் தொழிலாளர்கள் கூறுகையில், மனிதர்களுக்கு பலவித நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது நாவல் பழம். அது 2 வகைப்படும். பெரிய நாவல் பழம். சிறிய நாவல் பழம். மலைப்பகுதிகளில் விளைவது சிறிய நாவல் பழமாகும்.
இதனை மலை நாவல் பழம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. நாங்கள் ஒரு நாளைக்கு காலை முதல் மாலை வரை 50 கிலோ முதல் 60 கிலோ வரை நாவல் பழங்களை பறிக்கிறோம். எங்களிடம் மொத்த கொள்முதல் வியாபாரிகள் கிலோவுக்கு ரூ.80 கொடுத்து நாவல் பழங்களை வாங்கி செல்கின்றனர் என்றனர்.
சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வர கசப்பு மற்றும் துவர்ப்பு சுவை நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்' என்று மருத்து வர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
அந்த வகையில் நாவல் பழத்தில் இயற்கையிலேயே துவர்ப்புச் சுவை மிகுந்தும் இனிப்புச் சுவை குறைவாகவும் இருக்கும். குறைந்த விலையில் கிடைக்கும் பழங்களில் இதுவும் ஒன்று என்பதால் நாவல் பழத்தை அனைவருமே உண்ணலாம். ஆனால், அளவோடு உண்பதே நல்லது.






