என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவட்ட மாநாடு"

    • குமரி மாவட்டத்தில் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • குமரி மாவட்டத்தில் சட்டக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    நாகர்கோவில்:-

    குமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு நாகர்கோவிலில் இன்று நடந்தது. மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார்.மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன் மாநில நிர்வாக குழு விசுவநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றி னார்கள்.

    மாவட்ட பொருளாளர் சுபாஷ் சந்திர போஸ், மாநகர பொருளாளர் நாகராஜன், மாநகர செயலாளர் இசக்கிமுத்து மற்றும் நிர்வாகிகள் ஸ்ரீகுமார், அருணாச்சலம், அணில் குமார், தாமரை சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    குமரி மாவட்டத்தில் சாலைகளை சீரமைக்கவும் சட்டக்கல்லூரி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×