என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரியாயிபாளையம்"

    • மது அருந்துவது உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடக்கிறது.
    • பகல் மற்றும் இரவில் போலீசார் ரோந்து வர வேண்டும்.

    அவிநாசி :

    திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லையில், பழங்கரை ஊராட்சிக்குட்பட்டு பெரியாயிபாளையம் பகுதி உள்ளது.

    அப்பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு, முதல்வர், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில், பெரியாயிபாளையம் அரசுப்பள்ளியை சுற்றி தெரு விளக்கு அமைக்க வேண்டும். இரவில் பள்ளிக்கு ஒதுக்குப்புறத்தில் மது அருந்துவது உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடக்கிறது.

    கிராமத்திற்குள் கஞ்சா புழக்கம் அதிகரித்திருக்கிறது. பகல் மற்றும் இரவில் போலீசார் ரோந்து வர வேண்டும் என கூறியுள்ளார்.

    ×