என் மலர்
நீங்கள் தேடியது "நீர்மின் பயிற்சி நிலையம்"
- அடுக்குமாடி குடியிருப்பு பகுதி சுகாதார மில்லாத வகையில் புதர் மண்டி கிடப்பதாக கூறப்படுகிறது. மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் காணப்படு கிறது.
- அதிகாரிகள் இந்த பகுதியில் ஆய்வு செய்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ளது குதிரைகல்மேடு. இந்த பகுதியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நீர்மின் பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. மேலும் அடுக்கு மாடி குடியிருப்பு களும் உள்ளது.
அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் துறை சார்ந்த அதிகாரிகள், பணியாளர்கள் ஊழியர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதி சுகாதார மில்லாத வகையில் புதர் மண்டி கிடப்பதாக கூறப்படுகிறது. மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் காணப்படு கிறது. இதனால் சிலர் அந்த குடியிருப்பு பகுதியை காலி செய்து விட்டு வேறு பகுதிக்கு சென்று விட்டனர்.
மேலும் குடியிருப்பு பகுதியில் புதர்மண்டி கிடப்பதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அடிக்கடி வருவதாக மக்கள் கூறினர். இதுகுறித்து அங்கு குடியிருப்பவர்கள் அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.
மேலும் அப்பகுதி புதர் மண்டி இருப்பதால் சிலர் அந்த பகுதிக்கு வந்து மது அருந்துவது தொடர் கதையாகி வருகிறது.
மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்த பகுதியில் உள்ள நீர்மின் பயிற்சி நிலையத்தில் பயிற்சி எடுப்பதற்காக மின்வாரிய அதிகாரிகள் வந்து செல்கிறார்கள். ஆனால் அதனை சுற்றி புதர் மண்டிக் கிடப்பதை பார்த்து முகம் சுளித்து கொண்டு செல்கின்றனர்.
எனவே அதிகாரிகள் இந்த பகுதியில் ஆய்வு செய்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.






