என் மலர்
நீங்கள் தேடியது "நீலாம்பூர்"
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்சாரம் தடைபடும்.
கோவை:
முத்துக்கவுண்டன்புதூர் துணை மின்நிலையத்தில் நாளை (20-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன்காரணமாக அந்த மின்வழித்தடத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்சாரம் தடைபடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
முத்துக்கவுண்டன்புதூர் பகுதியில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் வருமாறு:-
நீலாம்பூர், அண்ணா நகர்-நீலாம்பூர், லட்சுமி நகர், குளத்தூர், முத்துக்கவுண்டன்புதூர் ரோடு, பைபாஸ் ரோட்டின் ஒருபகுதி மற்றும் குரும்பபாளையத்தின் ஒரு பகுதி. மேற்கண்ட தகவலை சோமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் கே.ஆர்.சபரிராஜன் தெரிவித்து உள்ளார்.
- மர்மநபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து, மாட்டை அவிழ்த்து கொண்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
- சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றன்.
நீலாம்பூர்,
கோவை நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் வீட்டில் உள்ள தோட்டத்தில் 5 ஆண்டுகளாக மாடுகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் அவர் வீட்டில் நேற்று இரவு நாய்கள் சத்தமிட்டதால் அவரது மனைவி மற்றும் மகனிடம் சென்று பார்க்கச் சொல்லியுள்ளார்.
அங்கு சென்று பார்த்த போது தொழுவத்தில் கட்டி இருந்த மாட்டை காணவில்லை. பின்னர் அவர்கள் வீட்டில் பொருத்தி இருந்த சி.சி.டி.வி காட்சிகளை பார்த்து உள்ளனர்.
அதில் மர்மநபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து, மாட்டை அவிழ்த்து கொண்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அருகில் சென்று மாட்டை தேடினர். இருட்டான பகுதியில் மாடு நின்று கொண்டு இருப்பதை கண்டு மீண்டும் அந்த மாட்டை பிடித்து வந்து தோட்டத்தில் கட்டி உள்ளனர்.
பின்னர் இது குறித்து சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர்.
அவர்கள் சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்து அருகில் உள்ள லாரி நிறுத்துமிடம் போன்ற பகுதிகளுக்கு சென்று தேடிப் பார்த்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






