என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணை சபாநாயகர் ஆய்வு"

    பொள்ளாச்சி மகாலிங்க புரத்தில் செயல்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆய்வு செய்தார்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சமத்தூர் ராம ஐயங்கார் மேல்நிலைப்பள்ளியில் அரசு கலைக்கல்லூரி 5 பாடப்பிரிவுகளுடன் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு கூடுதலாக பாடப்பிரிவுகள் தேவை என பொள்ளாச்சி மக்கள் பொள்ளாச்சி ஜெயராமனிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து, இந்த ஆண்டு, பி.ஏ.தமிழ், பி.சி.ஏ., பி.எஸ்.சி.கம்பியூட்டர் சயின்ஸ்., பி.காம்., பி.ஏ., எக்கனாமிக்ஸ்., ஆகிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது.

    மாணவர்களின் வசதிக்காக பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் இருந்து நெகமம் செல்லும் பேருந்துகள் கல்லூரி வழியாக இயக்க துணை சபாநாயகர் போக்குவரத்து துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், கல்லூரியை பொள்ளாச்சி ஜெயராமன் ஆய்வு செய்தார். கழிப்பிட வசதி, குடிநீர், கூடுதல் வகுப்பறைகள் போன்றவை குறித்து கேட்டறிந்தார்.

    அவருடன் நகராட்சி முன்னாள் தலைவர் கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் கிருஷ்ணராஜ், அதிமுக நிர்வாகிகள் கார்த்திக், வக்கீல் தனசேகர், வீராச்சாமி, நீலகண்டன், செந்தில் உட்பட பலர் இருந்தனர்.

    ×