என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லீ லூங்"

    சிங்கப்பூரில் நடைபெறவுள்ள பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஹலிமா யாகோப், மற்றும் பிரதமர் லீ லூங் ஆகியோரை சந்தித்து பேசினார். #ModiInSingapore
    சிங்கப்பூர்:

    அரசு முறை பயணமாக இந்தோனேசியா நாட்டுக்கு முதலாவதாக சென்றிருந்த இந்திய பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில் இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    அதைத்தொடர்ந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு மோடி செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று மலேசியா சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் மஹாதிர் முகமதுவை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, இரு நாட்டு உறவுகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.



    இதைத்தொடர்ந்து சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடிக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டு அதிபர் ஹலிமா யாகோப் மற்றும் பிரதமர் லீ லூங் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. #ModiInSingapore
    ×