என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து மல்லையா பங்களா"

    இங்கிலாந்தில் உள்ள சொத்துக்கள் என் பெயரில் இல்லை எனவும் சொத்துக்கள் எதையும் பறிமுதல் செய்ய இயலாது எனவும் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். #VijayMallya
    லண்டன்:

    இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடிக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா லண்டனில் தலைமறைவாக இருக்கிறார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கடன் பாக்கிக்காக விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்வதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அவர் நடத்தி வந்த கிங்பி‌ஷர் விமான நிறுவனம் ரூ.800 கோடி பாக்கி வைத்து இருந்தது. அதற்காக அவரது ஏ319 ஜெட் சொகுசு விமானம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.35 கோடிக்கு ஏலத்தில் விற்பனை செய்தது.

    இந்த நிலையில் வங்கி கடனுக்காக இங்கிலாந்தில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அனுமதிக்கும்படி அந்நாட்டு உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கை விசாரித்த கோர்ட்டு லண்டன் அருகே ஹார்போர்ட் ஷையரில் விஜய் மல்லையா தங்கியிருக்கும் லேடி வால்க் அன்ட் பிரம்பிள் லாட்ஜ் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தவும், சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அனுமதி வழங்கியது.

    இந்த நிலையில் லண்டனில் தங்கியிருக்கும் விஜய் மல்லையா ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது “இங்கிலாந்தில் உள்ள எனது சொத்து விவரங்களை கோர்ட்டில் பிரமாண பத்திரத்தில் தெரிவித்து இருக்கிறேன்.

    எனவே அவற்றை முடக்கி கடனுக்காக வங்கிகள் பறிமுதல் செய்து கொள்ளலாம். எனக்கு அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் சொத்துக்கள் எதுவும் என் பெயரில் இல்லை. ஆடம்பர மாளிகை எனது குழந்தைகள் பெயரிலும், லண்டனில் உள்ள வீடு எனது தாயார் பெயரிலும் உள்ளது.

    எனவே சொத்துக்கள் எதையும் பறிமுதல் செய்ய இயலாது. சில கார்கள், சில நகைகள் உள்ளது. வேண்டுமானால் அவற்றை பறிமுதல் செய்யட்டும். அதில் எந்த தடையும் இல்லை.

    நானே அவற்றை ஒப்படைக்கிறேன். அதற்கான நாள், நேரம் மற்றும் இடத்தை தெரிவிக்கட்டும் என பதட்டமின்றி மிரட்டும் பாணியில் பதில் அளித்தார்.

    சொத்துக்கள் பறிமுதல் குறித்து டுவிட்டரில் ஏற்கனவே பதில் அளித்து இருந்தார். அதில் இந்திய குற்றவியல் அமலாக்கத்துறை இந்தியாவில் உள்ள எனது சொத்துக்களை முடக்கி இருக்கலாம். ஆனால் அவற்றை விற்க முடியாது. சிறிதளவு வட்டியை மட்டும் வசூலித்து கொள்ளலாம்” என தெரிவித்து இருந்தார். #VijayMallya
    விஜய் மல்லையாவின் ரூ.963 கோடி சொத்துக்களை ஸ்டேட் வங்கி தனது கடனுக்காக இன்று ஏலம் விட்டுள்ளது.#Mallya #statebank

    புதுடெல்லி:

    பெங்களூரைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா தனது கிங்பி‌ஷர் விமான நிறுவனத்துக்கு 13 வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி தலை மறைவாகி விட்டார்.

    அவர் மீது சி.பி.ஐ.யும் அமலாக்கப் பிரிவு இயக்குனரகமும் வழக்குகள் பதிவு செய்துள்ளன. அவரை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    வங்கி கடனுக்காக விஜய் மல்லையாவின் மும்பை, கோவா, பெங்களூர் உள்பட பல இடங்களில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டும், கையகப்படுத்தி ஏலம் விடப்பட்டும் வருகிறது.

    இந்த நிலையில் விஜய் மல்லையாவின் ரூ.963 கோடி சொத்துக்களை ஸ்டேட் பாங்கி தனது கடனுக்காக இன்று ஏலம் விட்டது.

    இதற்கிடையே 13 இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் லண்டனில் உள்ள மல்லையாவுக்கு சொந்தமான சொத்துக்களை சோதனையிடவும், கையகப்படுத்தி ஏலம் விட்டு பணத்தை பெறவும் அனுமதி கேட்டு இங்கிலாந்து ஐகோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டது.

    கடந்த மாதம் 26-ந்தேதி இதற்கு அனுமதி அளித்து லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி லண்டன் லேடிவாக் சொகுசு பங்களா, குயின் ஹுலேன், டெவின், வெல்வின் கட்டிடங்களில் சோதனை நடத்தி அவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள இந்திய வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் இந்திய வங்கிகள் அந்த சொத்துக்களை கைப்பற்றி ஏலம் விட்டு பணத்தை திரும்ப பெற வழி வகுத்துள்ளது.

    இதற்கிடையே லண்டன் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மனு நிலுவையில் உள்ளது. #Mallya #statebank

    ×