என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்து நிவாரண உதவித்தொகை"

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் விபத்து நிவாரணத் தொகைக்கான ஆணையினை கலெக்டர் சுரேஷ்குமார் வழங்கினார்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான கூட்டத்தில் 9 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 183 என மொத்தம் 192 மனுக்கள் பெறப்பட்டது.

    கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 500 வீதம், ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் விபத்து நிவாரணத் தொகைக்கான ஆணையினையும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ஒரு நபருக்கு தலா ரூ.1000 வீதம் மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணையினையும் வழங்கினார்.

    சமூக நலத்துறை சார்பில் மூத்த குடிமக்கள் குடும்பங்களிலும், சமூகத்திலும் அவமதிக்கப்படுவதை தடுப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றிப் பெற்ற கல்லுரி மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், தனித்துணை கலெக்டர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) வேலுமணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் விக்டர் மரியஜோசப் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    ×