என் மலர்
நீங்கள் தேடியது "சென்னை வாலிபர் மர்ம மரணம்"
மாமியார் வீட்டுக்கு வந்தபோது சென்னை வாலிபர் மர்மமாக உயிரிழந்ததையடுத்து சதுரங்கபட்டிணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
சென்னை கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் பிரபு (31). இவர் நேற்று மாலை கூவத்தூர் அடுத்த தன்டாம்பட்டியில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் சென்னை செல்ல பஸ் ஏறுவதற்காக கூவத்தூர் செல்வதாக கூறி சென்றார்.
இந்த நிலையில் கல்பாக்கம் அடுத்த பெருமாள்சேரி பக்கிங்காம் கால்வாய் தரைப்பாலம் அருகே பிரபு பிணமாக கிடந்தார். சதுரங்கபட்டிணம் போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரபு எதற்காக மாமியார் வீட்டுக்கு வந்தார். கூவத்தூர் செல்வதாக கூறியவர் எப்படி பெருமாள்சேரியில் பிணமாக கிடந்தார். யாரேனும் அவரை அடித்து கொலை செய்தனரா? என்று சதுரங்கபட்டிணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.