என் மலர்
நீங்கள் தேடியது "வாய்கால்"
மழைநீர் வாய்க்கால்கள் மற்றும் சாக்கடை நீர் வடிகாலில் பொதுமக்கள் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்களை போட வேண்டாம் என்று மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருச்சி:
திருச்சி மாநகராட்சி பகுதி முழுவதும் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரி மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோ.அபிசேகபுரம் 45-வது வார்டு ஜேபிநகர், வசந்தநகர், செல்வாநகர், ஜே.ஆர். எஸ். நகர் ஆகிய பகுதிகளை கடந்து செல்லும் கருமண்டபம் ஜெயநகர் மழைநீர் வடிகால் வாய்க்காலை மாநகராட்சி பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்றது. அந்த பணியை இன்று ஆணையர் ரவிச்சந்திரன் பொறியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஆணையர் ரவிச்சந்திரன் கூறியதாவது:-
மழை காலம் தொடங்கவுள்ளதால் மாநகர பகுதிக்குள் உள்ள அனைத்து மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் மற்றும் சாக்கடைநீர்வடிகால் வாய்க்கால்களை மழை நீர்செல்வதற்கு வசதியாக தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும் என பொறியாளர் களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் மழைநீர் வாய்க்கால்கள் மற்றும் சாக்கடை நீர்வடிகாலில் பொதுமக்கள் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்களை போட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.






