என் மலர்
நீங்கள் தேடியது "துணைக்கோள் நகரம்"
திருப்பரங்குன்றம்:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள உச்சப்பட்டி தோப்பூர் பகுதியில் 572 ஏக்கர் பரப்பளவில் துணைக்கோள் நகரம் அமைய உள்ளது. இதற்கான பணிகள் நடை பெற்று வருகிறது.
இதில் உச்சபட்டி பகுதியில் 60 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களை வழங்க விவசாயிகள் மறுத்து வந்தனர். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் அருகே உள்ள மூணான்பட்டி பகுதியில் 18 ஏக்கர் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீஸ் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு செயற் பொறியாளர் பாண்டியராஜன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அங்கு வந்தனர்.
அவர்கள் 18 ஏக்கர் இடத்தில் இருந்த மரங்களை ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் அகற்றினர். இதற்கு மகாதேவன் என்ற விவசாயி எதிர்ப்பு தெரிவித்தார்.
திடீரென்று அவர் மரத்தில் ஏறி தற்கொலை செய்வதாக மிரட்டினார். பெண்களும் மண்எண்ணை குடித்தும், கிணற்றில் குதித்தும் தற்கொலை செய்வோம் என மிரட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.






