என் மலர்
நீங்கள் தேடியது "ஓட்டல் அதிபர் படுகொலை"
ஹோமோ செக்ஸ் தகராறில் ஓட்டல் அதிபர் படுகொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை மெயின் ரோட்டில் அம்மன் மெஸ் என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வந்தவர் கோபி (வயது 49). ஓட்டல் மாடியில் இவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 14-ந் தேதி கோபி வீட்டில் இருந்து திடீரென்று மாயமானார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அம்மாப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அவரை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுட்டு வந்தனர்.
இந்த நிலையில் மாயமான கோபி திருச்சி மாவட்டம் முசிறி காவிரி கரையோரம் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போலீசார் அவரது பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
கோபி மாயமான அதே நாளில் இருந்து அவரது நண்பர் மணிகண்டன் என்பவரையும் காணவில்லை. இவரது சொந்த ஊர் சேலம் அருகே உள்ள மின்னாம்பள்ளி ஆகும். இவர் தற்போது பொன்னம்மாபேட்டையில் வசித்து வருகிறார். இவரது கதி என்ன என்பது மர்மமாக உள்ளது.
ஓட்டல் அதிபர் கோபி எப்படி கொலை செய்யப்பட்டார்? அவரை கொன்றது யார்? என்பது புரியாத புதிராக உள்ளது. அவரது நடை உடை பாவனைகள் பெண்களைப்போல இருந்ததாக கூறப்படுகிறது.
அவருக்கு பல நண்பர்கள் உள்ளனர். மாயமான மணிகண்டனும், கோபியும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். எங்கு சென்றாலும் 2 பேரும் ஒன்றாகத் தான் செல்வார்கள். சம்பவம் நடந்த அன்றும் 2 பேரும் காரில் சென்றுள்ளனர். ஆனால் கோபி மட்டும் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். காருடன் மாயமான மணிகண்டன் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை.
ஹோமோ செக்ஸ் தகராறில் கோபியை தீர்த்துக் கட்டப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. மேலும் கோபி பலரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபியின் பிணத்தை கைப்பற்றிய போலீசார் அதை அனாதை பிணம் என்று கருதி 2 நாட்களில் அங்கேயே புதைத்து விட்டனர். சில நாட்களுக்குப்பிறகு தான் உறவினர்களுக்கு இதுபற்றி தகவல் கிடைத்தது. அவர்களிடம் போட்டோவை காட்டிய போலீசார் கொலை செய்யப்பட்டது கோபி தான் என்பதை உறுதி செய்தனர். இதுவும் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது.
கோபியின் நண்பர் மணிகண்டன் பிடிபட்டால் தான் கொலைக்கான உண்மையான காரணங்கள் தெரியவரும். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.






