என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம்பூரில் ரேசன் அரிசி பறிமுதல்"

    ஆம்பூரில் ஆந்திராவுக்கு கடத்த சாலையோரம் வைத்திருந்த 2 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூரில் இருந்து பேரணாம்பட்டு வழியாக ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை ஆம்பூர் வட்ட வழங்கல் அலுவலர் மகேஸ்வரி மற்றும் வருவாய் துறையினர் ரோந்து சென்றனர்.

    ஆம்பூர் அடுத்த பள்ளி தெரு என்ற இடத்தில் சாலையோரம் மூட்டைகளில் ரேசன் அரிசி கட்டி அடுக்கி வைத்திருந்தனர். 30-க்கும் மேற்பட்ட 2-டன் ரேசன் அரிசி இருந்தது. அவற்றை ஆந்திர மாநிலத்துக்கு கடத்தி செல்ல சாலையோரம் வைத்திருந்தது தெரியவந்தது. 2டன் அரிசியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் ஆம்பூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

    மேலும், ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரேசன் அரிசி கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
    ×