என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே வாரிய தலைவர் அஷ்வானி லோஹானி"

    பஞ்சாப் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரெயில் விபத்து குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என ரெயில்வே வாரிய தலைவர் அஷ்வானி லோஹானி தெரிவித்துள்ளார். #AmritsarTrainAccident
    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் தசரா விழாவின் போது ஏற்பட்ட ரெயில் விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பேசிய ரெயில்வே வாரிய தலைவர் அஷ்வானி லோஹானி, விபத்தின்போது ரெயில் அதற்கு விதிக்கப்பட்டு இருந்த வேகத்திலேயே சென்று கொண்டிருந்ததாகவும், திடீரென ரெயிலை நிறுத்த முயற்சித்து இருந்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்பட்டு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த தசரா கொண்டாட்டம் குறித்து எந்த வித தகவலும் ரெயில்வே துறைக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும், எந்த அனுமதியும் ரெயில்வே துறையிடம் பெறப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #AmritsarTrainAccident
    ×