என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓ.எஸ்.மணியன்"

    ஒருவர் மீது குற்றம் சுமத்தினால் பெரிய மனிதர் ஆகிவிடலாம் என்பது தற்போது நாகரீகம் ஆகிவிட்டது என அமைச்சர் ஓஎஸ் மணியன் கூறியுள்ளார். #OSManian
    நெல்லை:

    தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று காலை நெல்லை வந்தார். நெல்லை குறுக்குத்துறையில் நடந்த தாமிரபரணி புஷ்கர விழா வழிபாட்டில் அவர் கலந்துகொண்டார். பின்பு அவர் தாமிரபரணியில் புனித நீராடினார். இதன்பிறகு ஓ.எஸ்.மணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒருவர் மீது குற்றம் சுமத்தினால் பெரிய மனிதர் ஆகிவிடலாம் என்பது தற்போது நாகரீகம் ஆகிவிட்டது. அமைச்சர் ஜெயக்குமார் மீதான குற்றச்சாட்டும் அதுபோன்றதுதான். குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாம் பதவி விலக வேண்டும் என்றால் எவரும் பதவியில் இருக்க முடியாது.

    எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் தீர்ப்புக்கு முன்பே குற்றாலம் செல்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது தெரிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #OSManian
    ×