என் மலர்
நீங்கள் தேடியது "இன்டிகோ"
தீபாவளி சிறப்பு சலுகையாக 899 ரூபாய் கட்டணத்தில் உள்நாட்டில் 64 வழித்தடங்களில் பயணம் செய்யலாம் என இன்டிகோ விமானச் சேவை நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. #IndiGoDiwalisale #IndiGofaresRs899
புதுடெல்லி:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜெட் ஏர்வேஸ், ஏர் ஏசியா ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் பயணக் கட்டணத்தில் சலுகை திட்டங்களை அறிவித்திருந்தன.
அவ்வகையில், 899 ரூபாய் கட்டணத்தில் தொடங்கி, உள்நாட்டில் 64 வழித்தடங்களில் பயணம் செய்யலாம் என இன்டிகோ விமானச் சேவை நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
8-11-2018 முதல் 15-4-2019 வரை பயணம் செய்யும் வகையில் அக்டோபர் 24 (இன்று) முதல் 26-ம் தேதிவரை இதற்கான டிக்கெட்டுகளை இன்டிகோ இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #IndiGoDiwalisale #IndiGofaresRs899






