என் மலர்
நீங்கள் தேடியது "அம்மன் சிலை மீட்பு"
தாம்பரத்தில் சாலையோரம் கிடந்த அம்மன் சிலையை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Ammanstatue
தாம்பரம்:
தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையோரம் சுமார் 1 அடி உயரம் உள்ள அம்மன் சிலை கிடந்தது. அந்த பகுதியில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் சேகரிப்பவர் இதை பார்த்து தாம்பரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிலையை மீட்டு தாம்பரம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
அந்த சிலை சுமார் 5 கிலோ எடையில் இருந்தது. இந்த சிலை கோவில்களில் இருந்து திருடப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் பகுதியில் பாதுகாப்புக்காக அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் சிலையை திருடி வந்த மர்ம நபர்கள், போலீசாருக்கு பயந்து அதனை சாலையோரம் வீசி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த சிலையை வீசிச்சென்றது யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Ammanstatue