என் மலர்
நீங்கள் தேடியது "மாணவி கடத்தல் முயற்சி"
சேலையூரில் இன்று காலை பிளஸ்-1 மாணவிக்கு விஷம் கொடுத்து காரில் கடத்த முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
கிழக்கு தாம்பரம், கண்ணகி தெருவைச் சேர்ந்த 16 வயது மாணவி, சேலையூரில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
இன்று காலை மாணவி வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். சேலையூர் புத்தர் தெரு வழியாக நடந்து சென்றபோது காரில் வந்த 3 பெண்கள் மாணவியிடம் பேச்சு கொடுத்தனர்.
திடீரென 3 பெண்களும் மாணவியை அமுக்கி பிடித்து கொண்டு அவரது வாயில் விஷத்தை ஊற்றினர். பின்னர் மாணவியை காருக்குள் இழுத்துப் போட்டு கடத்த முயன்றனர்.
இதனால் நிலைகுலைந்த மாணவி கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே சென்றவர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர்.
இதனால் உஷாரான 3 பெண்களும் அங்கிருந்து ஓடி தாங்கள் வந்த காரில் தப்பி சென்று விட்டனர்.
விஷம் குடித்ததால் மாணவியின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மாணவியை கடத்த முயன்ற பெண்கள் யார்? அதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
சம்பவம் நடந்த இடத்தில் சேலையூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சியை வைத்து தப்பி சென்ற பெண்கள் குறித்து விசாரணை நடக்கிறது.
குடும்ப தகராறில் கடத்தல் முயற்சி நடந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். மாணவிக்கு கொடுக்கப்பட்ட விஷத்தின் தன்மையை அறிய அதன் மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மாணவிக்கு நடுரோட்டில் வாயில் விஷம் ஊற்றி கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.