என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி மாணவர்களுடன் செக்ஸ்"

    சைதாப்பேட்டையில் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை ஏமாற்றி ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    சென்னை:

    சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் இருவரை ஏமாற்றி அதே பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    இதனை நாளடைவில் பள்ளி மாணவர்கள் இருவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

    இந்த நிலையில் பகுதியில் உள்ள இன்னொரு பள்ளியில் சிறுவயதில் ஏற்படும் செக்ஸ் சீண்டல்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் செக்ஸ் தொல்லைக்குள்ளான 2 சிறுவர்களும் பங்கேற்றனர். அப்போதுதான் அவர்களுக்கு தாங்கள் அனுபவித்து வருவது செக்ஸ் கொடுமை என்பது தெரியவந்தது.

    இதுபற்றி மாணவர்கள் பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் தெரிவித்தனர். பின்னர் இதுபற்றி சைதாப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது சைதாப்பேட்டையைச் சேர்ந்த சூரிய நாராயணன், பாரத், முத்து ஆகிய வாலிபர்களே, மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ×