என் மலர்
நீங்கள் தேடியது "நியூசிலாந்து-இலங்கை தொடர்"
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய இலங்கை வீரர்களுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. #NZvSL
நியூசிலாந்து - இலங்கை இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 371 ரன்கள் குவித்தது. கப்தில் 139 ரன்கள் விளாசினார்.
பின்னர் 372 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. குசால் பெரேரா (102), டிக்வெல்லா (76), குணதிலகா (43) ஆகியோர் சிறப்பாக விளையாடிய போதிலும் இலங்கை 326 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணி பேட்டிங் செய்யும்போது இலங்கை பந்து வீச்சாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. இதனால் போட்டிக்கான சம்பளத்தில் இருந்து இலங்கை வீரர்களுக்கு தலா 10 சதவிகிதமும், கேப்டன் மலிங்காவிற்கு 20 சதவிகிதமும் அபராதம் விதித்தது ஐசிசி.

மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீசம் திசாரா பெரேரா வீசிய ஓவரில் ஐந்து சிக்சர்கள் விளாசினார். #NZvSL
நியூசிலாந்து - இலங்கை இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து ஒரு கட்டத்தில் 48 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள்தான் எடுத்திருந்தது.
49-வது ஓவரை திசாரா பேரேரா வீசினார். இந்த ஓவரில் நீசம் முதல் நான்கு பந்துகளையும் இமாலய சிக்சருக்கு தூக்கினார். ஐந்தாவது பந்து நோ-பால். இதில் இரண்டு ரன்கள் அடித்தார். நோ-பால் என்பதால் அதற்குப் பதிலாக வீசிய பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸ் அடித்தார். ஐந்து பந்தில் தொடர்ச்சியாக ஐந்து சிக்சர்கள் விளாசிய நீசம் கடைசி பந்தையும் சிக்சருக்கு தூக்கி சாதனைப் படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே அடித்தார். இந்த ஓவரில் திசாரா பெரேரா 34 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர்கள் வரிசையில் 3-வது இடத்தை பிடித்துள்ளார் திசாரா பெரேரா. இதற்கு முன் கடந்த 2013-ல் தென்ஆப்பிரிக்கா வீரர் ராபின் பீட்டர்சன் திசாரா பெரேரா ஓவரில் 35 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிம்மி நீசம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப்பின் இன்றுதான் சர்வதேச போட்டியில் களம் இறங்கினார். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் களம் இறங்கிய முதல் ஆட்டத்திலேயே ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். 13 பந்தில் 6 சிக்சருடன் 47 ரன்கள் குவித்த நீசம், அதிவேக அரைசதம் என்ற சாதனையை தவறவிட்டார்.

மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து #NZvSL
மவுண்ட் மவுங்கானுய்:
நியூசிலாந்து - இலங்கை இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
கொலின் முன்றோ 13 ரன்னில் வெளியேறினார். அடுத்து கப்தில் உடன் கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேன் வில்லியம்சன் 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மார்ட்டின் கப்தில் 139 பந்தில் 138 ரன்கள் விளாசி வெளியேறினார்.

நீசம்
அதன்பின் வந்த ராஸ் டெய்டர் 54 ரன்களும், நீசம் ஆட்டமிழக்காமல் 47 ரன்களும் அடிக்க நியூசிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது.
பின்னர் 372 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. தொடக்க வீரர்களான டிக்வெல்லா (76), குணதிலகா (43) ஆகியோர் சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். அதன்பின் குசால் பெரேரா அற்புதமாக விளையாடினார்.

குணதிலகா
ஆனால் குசால் மெண்டிஸ் (18), சண்டிமல் (10), குணரத்னே (11), திசாரா பேரேரா (4) சொற்ப ரன்களில் வெளியேற இலங்கை அணியின் தோல்வி உறுதியானது. குசால் பெரேரா 86 பந்தில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் இலங்கை 49 ஓவரில் 326 சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து - இலங்கை இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை மவுண்ட் மவுங்கானுயில் தொடங்குகிறது. #NZvSL
மவுண்ட் மவுங்கானுய்:
இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் ஆட்டம் நாளை மவுண்ட் மவுங்கானுயில் பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. டெஸ்ட் தொடரை இழந்த இலங்கை அணி ஒரு நாள் தொடரில் சிறப்பாக விளையாடி போராடும். டெஸ்ட் தொடரை போல் ஒரு நாள் தொடரை வெல்லும் ஆர்வத்துடன் நியூசிலாந்து உள்ளது.