என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊராட்சி செயலாளர் தற்கொலை"

    ஒட்டன்சத்திரம் அருகே பொங்கல் பண்டிகை நாளில் ஊராட்சி செயலாளர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே இடைய கோட்டையை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 45).வடகாடு பஞ்சாயத்தில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவர் வெரியப்பூர் ஊராட்சி செயலாளராக இருந்தார். பின்னர் வடகாடு ஊராட்சி செயலாளராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

    பொங்கல் பண்டிகை நாளில் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த இடையகோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து உடலை கைப்பற்றினர். 

    பெரியசாமி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்த பெரியசாமிக்கு மனைவி உமா (30), 2 மகன்கள், 1 மகள் உள்ளனர்.

    ×