என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலி நிலநடுக்கம்"

    • பொது மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
    • பூமியில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

    சிலியின் வடக்குப் பகுதியில் உள்ள வல்லெனார் நகரத்திற்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொது மக்கள் அச்சத்தில் உறைந்தனர். நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 அளவில் பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் குறித்து வெளியான முதற்கட்ட தகவல்களில், யுடிசி நேரப்படி 13:39 மணி (இந்திய நேரப்படி இரவு 7.09 மணி) அளவில் வல்லெனாரில் இருந்து சுமார் 85 கிலோமீட்டர்கள் மேற்கில் ஏற்பட்டது.

    நிலநடுக்கம் பூமியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் மேற்பரப்பில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் கருதப்படுகிறது. நிலநடுக்கத்தால் சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இது குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.

    சிலி போன்ற நிலநடுக்க பகுதிகளில் இத்தகைய நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படுகிறது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உள்ளூர் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    தென்அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 2 பேர் பலியானார்கள். #ChileEarthQuake
    சாண்டியாகோ:

    தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரமான கோகும்பாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 10.32 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவானது.

    இந்த நிலநடுக்கத்தின் போது வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியதால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு பெண் உள்பட 2 முதியவர்கள் இறந்தனர்.  #ChileEarthQuake
    தென்அமெரிக்க நாடான சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. #ChileEarthQuake
    சான்டியாகோ:

    தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டில் உள்ள கோகியும்போ கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில், 53 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.7 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
    ×