என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பர்னிச்சர் தீவிபத்து"

    சாலிகிராமத்தில் பர்னிச்சர் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்த நாசமாயின.
    போரூர்:

    சாலிகிராமம் ராஜாஜி காலனி ஏவிஎம் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் ஆற்காடு சாலையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். கடையின் பின்புறம் குடோன் உள்ளது. இன்று அதிகாலை குடோனில் இருந்து கரும்புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் தீ பரவி மளமளவென தீப்பிடித்து எரிந்தது.

    இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் விருகம்பாக்கம் போலீசாருக்கும் தீயனைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். கோயம்பேடு, கீழ்ப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து 3 வாகனங்களில் வந்த தீயனைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரமாக போராடி தீயை அனைத்தனர்.

    கடையில் இருந்த கட்டில், மெத்தை, சோபா செட், சேர், டேபிள்கள், 1 இருசக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் 50 லட்சம் ஆகும். மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா அல்லது மர்ம நபர்கள் யாரேனும் கடைக்கு தீ வைத்தார்களா என அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.
    ×