என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து அரச குடும்பம்"

    • இனிமேல் தொடர்ந்து போராடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
    • ஒரு புத்தகம் எழுதியதற்காக என் குடும்பத்தில் சிலர் என்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

    லண்டன்:

    இங்கிலாந்து மன்னர் சார்லசின் இளைய மகன் இளவரசர் ஹாரி. தந்தை மற்றும் சகோதரர் வில்லியம் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த ஹாரி தனது மனைவி, குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

    இதற்கிடையே இங்கிலாந்து கோர்ட்டில் நடந்து வந்த தனது பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான வழக்கில் இளவரசர் ஹாரி தோல்வி அடைந்தார். அவரது மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    கடந்த 2020-ம் ஆண்டு உள்துறை அமைச்சகம், ஹாரி இங்கிலாந்தில் இருக்கும்போது தானாகவே போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியமில்லை என முடிவு செய்தது. இதை எதிர்த்துதான் ஹாரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த நிலையில் அரச குடும்பத்துடன் இணைய விரும்புவதாக ஹாரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    எனது குடும்பத்தினருடன் சமரசம் செய்து கொள்ள விரும்புகிறேன். இனிமேல் தொடர்ந்து போராடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. இந்த போராட்டத்தை என் தந்தை இன்னும் எவ்வளவு காலம் வைத்திருப்பார் என்று எனக்குத் தெரியவில்லை.

    எனது போலீஸ் பாதுகாப்பை ரத்து செய்வதற்கான இங்கிலாந்து அரசாங்கத்தின் முடிவுக்கு எதிரான மேல்முறையீட்டில் தோல்வியடைந்தது என்னை பேரழிவிற்கு ஆளாக்கியுள்ளது. இந்த பாதுகாப்பு விஷயங்களால் தந்தை சார்லஸ் என்னுடன் பேசமாட்டார். ஆனால் நான் இனி சண்டையிட விரும்பவில்லை.

    ஒரு புத்தகம் எழுதியதற்காக என் குடும்பத்தில் சிலர் என்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். நிச்சயமாக, அவர்கள் பல விஷயங்களுக்கு என்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். ஆனால் என் குடும்பத்துடன் சமரசம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.

    இங்கிலாந்து அரச குடும்பத்தில் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோர் தனிக்குடித்தனம் செல்கின்றனர். #William #Harry
    லண்டன்:

    இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பேரன்கள் இளவரசர் வில்லியம்- ஹாரி, இவர்கள் இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியினரின் மகன்கள். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது.

    இளவரசர் வில்லியமுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவரது தம்பி இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு ஏப்ரல் அல்லது மே மாதம் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இளவரசர்கள் வில்லியமும், ஹாரியும் ஒற்றுமையாக இருந்தனர். தற்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    அதைத்தொடர்ந்து இருவரும் தனித்தனியாக பிரிந்து விட்டனர். தற்போது இருவரும் தங்களின் அறக்கட்டளை பணிகள் மற்றும் அரச குடும்பத்து பணிகளை தனித்தனியாக கவனிக்கின்றனர். இதற்கு முன்பு அப்பணிகளை சகோதரர்கள் 2 பேரும் சேர்ந்தே கவனித்தனர்.

    ஹாரியின் திருமணத்துக்கு முன்பு இருவரும் ஒற்றுமையாகவே இருந்தனர். தற்போது வில்லியம் தன் மனைவி கேத் மிடில்டனுக்கும், ஹாரியின் மனைவி மேகனுக்கும் பிடிக்கவில்லை. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது.

    மேலும் ஹாரி தனது ஆலோசனையை பெற்று தனியாக செயல்பட வேண்டும் என மேகன் விரும்புகிறார். தனது கணவரின் செயல்பாடுகள் சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் இருக்க வேண்டும் என கருதுகிறார். இதன் காரணமாகவே இளவரசர்கள் வில்லியம்-ஹாரியின் மனைவிகளுக்குள் சண்டை ஏற்பட காரணம் என கென்சிங்டன் அரண்மனை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

    தற்போது கர்ப்பிணியாக இருக்கும் மேகன் தனது கணவர் ஹாரியுடன் கென்சிங்டன் அரண்மனையில் இருந்து வெளியேறி பிராக்மோர் காட்டேஜுக்கு தனிக்குடித்தம் போகிறார்.

    அங்கு தனி அலுவலகம் அமைத்து ஊழியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். அதேபோன்று இளவரசர் வில்லியமும் தனி அலுவலகம் மற்றும் ஊழியர்களை நியமித்து செயல்படுகிறார். #William #Harry
    ×