என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுராந்தகம் தொழிலாளி பலி"

    மதுராந்தகம் அருகே பாமக கொடிக்கம்பத்தை அகற்றிய தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குசேலன். இவரது மகன் சூர்யா (வயது 19).

    மதுராந்தகத்தில் உள்ள பந்தல் அமைப்பாளரிடம் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் மதுராந்தகத்தில் நேற்று இரவு அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கூட்டணி கட்சியான பா.ம.க. சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

    இதற்காக சாலையின் இரு பக்கமும் கட்சியின் கொடிக்கம்பங்கள் நடப்பட்டு இருந்தன. கூட்டம் முடிந்த பின்னர் கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் சூர்யா உள்பட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    அப்போது கொடிக் கம்பத்தில் இருந்த மின் விளக்கில் கசிந்த மின்சாரம் சூர்யாவை தாக்கியது. இதில் அவர் மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே சூர்யா பலியானார்.

    இதேப்போல் மற்றொரு தொழிலாளியும் மின்சாரம் தாக்கி காயம் அடைந்ததாக தெரிகிறது. இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×