என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீட் மறுப்பு"

    தேர்தலில் சீட் தர மறுத்ததால் அதிருப்தி அடைந்த டெல்லி பா.ஜனதா எம்.பி. உதித்ராஜ் அக்கட்சியில் இருந்து விலகி நேற்று காங்கிரசில் இணைந்தார். #BJPMP #UditRaj #Congress
    புதுடெல்லி:

    பா.ஜனதா கட்சி சார்பில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வடமேற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், உதித்ராஜ். இந்த தேர்தலில் அந்த தொகுதியில் மீண்டும் போட்டியிட அவர் கட்சித்தலைமையிடம் ‘சீட்’ கேட்டார். ஆனால் அவருக்கு ‘சீட்’ மறுத்த கட்சித்தலைமை, அவருக்கு பதிலாக பாடகர் ஹன்ஸ்ராஜ் ஹன்சுக்கு அந்த தொகுதியை ஒதுக்கியது.

    இதனால் அதிருப்தி அடைந்த உதித்ராஜ் பா.ஜனதாவில் இருந்து விலகி நேற்று காங்கிரசில் இணைந்தார். கட்சித்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரசில் தன்னை இணைத்துக்கொண்டார்.

    அவரை ராகுல் காந்தி வரவேற்றார். அப்போது கட்சியின் மூத்த தலைவர்களும் உடனிருந்தனர்.  #BJPMP #UditRaj #Congress 
    ×