search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivaganga Municipality"

    • சிவகங்கை நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரூ.80 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்நல மையத்தின் கட்டுமான நிலை குறித்தும் ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட உள்ள கூடுதல் கட்டிடத்திற்கான இடம் தேர்வு செய்தல் பணி மற்றும் சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து, மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காஞ்சிரங்கால் ஊராட்சி யில் தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் கலைஞ ரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 2021-22ன் கீழ் காளான் வளர்ப்புக்கூடம் அமைப்பதற்கென ரூ.1 லட்சம் மானியத்தொகை பெற்று சிப்பி காளான் பண்ணை வைத்துள்ள பயனாளியை நேரில் சந்தித்து, திட்டச் செயல் பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து மாவட்ட கலெக்டர் கேட்டறிந்து, விற்பனையை மேலும் விரிவுபடுத்து வதற்கென துறை சார்ந்த அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறும்படி பயனாளியிடம் கேட்டுக்கொண்டார்.

    மேலும் காஞ்சிரங்கால் ஊராட்சிக்குட்பட்ட காமராஜர் காலனியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குழந்தைகளின் எடை, உயரம் மற்றும் செயல்பாடு கள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து சிவகங்கை நகராட்சிக் குட்பட்ட பகுதியில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்நல மையத்தின் கட்டுமான நிலை குறித்து ஆய்வு செய்தார். அதனை தரமான முறையில் விரைந்து கட்டிட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    சிவகங்கையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பிரசவத்திற்கென சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கர்ப்பிணி பெண்கள் வருகை புரிந்து அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன் மூலம் சராசரியாக மாதந்தோறும் 400 முதல் 500 பிரசவங்கள் நடை பெற்று, தாய் சேய் நலன் காக்கப்பட்டு வருகிறது.

    தற்போது செயல்பட்டு வரும் தாய் சேய் நல மையக் கட்டிடத்தை தொடர்ந்து, அதனை விரிவுப்படுத்திடும் நோக்கில் அவ்வளாகத்தில் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக தாய் சேய் நலன் கட்டிடம் கட்டுவதற்கென இடம் தேர்வு செய்தல் பணி தொடர்பாகவும் மற்றும் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள அவசர விபத்து மற்றும் சிகிச்சை மைய கட்டிடத்திற்கான இடங்கள் தேர்வு செய்தல் பணிகள் தொடர்பாகவும் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வுகளின்போது சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் (கட்டிடம்) செந்தில்குமார், துணை இயக்குநர்கள் விஜய்சந்திரன் (பொது சுகாதாரம்), அழகுமலை (தோட்டக் கலைத்துறை), சிவகங்கை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பாண்டீஸ்வரி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ×