search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sikri Lab"

    • சிக்ரி ஆய்வகத்தை இலவசமாக பார்வையிடலாம் என்று அதிகாரி கூறினார்.
    • 04565-241470, 241502, 241355, 99945 14582 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    காரைக்குடி

    காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வகம் சிக்ரியை பார்வை யிட பொது மக்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) இலவச அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

    இதுகுறித்து சிக்ரி இயக்குநர் கேரமேஷா கூறியதாவது:-

    மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் கீழ், மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக் குழுமம் சி.எஸ்.ஐ.ஆர் இயங்கி வருகிறது. அதன் காட்டுப்பாட்டின் கீழ், காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வுக் கழகம் சிக்ரி உட்பட நாடு முழுவதும் 37 ஆராய்ச்சி நிறுவனங்கள்உள்ளன.

    சி.எஸ்.ஐ.ஆர். செப் 26-ந் தேதி தொடங்கப்பட்டது.இந்த நாள் நிறுவன நாளாக கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு, காரைக்குடி சிக்ரியில் பார்வையாளர்கள் தினம் கடைப் பிடிக்கப்படுகிறது. நாளை (26-ந் தேதி) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பொது மக்கள், மாணவர்கள் சிக்ரி கண்டு பிடிப்புகளை இலவசமாக பார்வை யிடலாம்.

    அதில் உலோக அரி மானம் தடுப்பு, காரிய அமில மின்கலம், லித்தியம் மின்கலம், துத்தநாக புரோமின் மின்கலம், தொழிற்சாலைக்கு உபயோ கமான ரசாயனங்கள், தூய நிலையான ஆற்றல், மின்வேதியியல் உணரிகள்.நானோ மின் வேதியியல் போன்ற பல்வேறு துறைகளில் கண்டு பிடிக்கப்பட்ட ஆராய்ச்சி களின் மாதிரிகள் இடம் பெற்றிருக்கும். மேலும் செயல் விளக்கமும் இருக்கும்.

    இதுதவிர எதிர்காலத்தில் எரிசக்தியை பூர்த்தி செய்யும் வகையில், நீரிலிருந்து தயாரிக்கப்படும் பசுமை எரிசக்தி ஹைட்ரஜன் காட்சிப்படுத்தப்படும். பார்வையாளர்களுக்கு காரைக்குடி பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையத்திலிருந்து பஸ் வசதி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    சிக்ரி வளாகத்தில் உணவு கிடைக்கவும், அவசர கால மருத்துவ சிகிச்சை பிரிவும் ஏற்பாடு செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு 04565-241470, 241502, 241355, 99945 14582 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×