search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shoes transport"

    • குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.
    • சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஆய்வு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இருந்து தௌசாவுக்கு ஆம்புலன்ஸில் மூட்டை மூட்டைகளாக காலணிகளை வைத்து ஏற்றிச் செல்லும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை அடுத்து, தௌசா அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து, தௌசா அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் ஷிவ்ராம் மீனா கூறியதாவது:-

    ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அதே நேரத்தில் இதுதொடர்பாக விசாரிக்க ஆய்வு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. குழு அதன் அறிக்கையை சமர்ப்பித்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.

    தேவைப்பட்டால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். இது ஒரு பயங்கரமான விஷயம். ஆம்புலன்ஸில் காலணிகளை ஏற்றிச் சென்ற சம்பவம் இன்று காலை என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×