search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sheep farming"

    திண்டுக்கல் அருகே தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் ஏராளமான விவசாயிகள் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சத்திரப்பட்டி:

    திண்டுக்கல் அருகே தொப்பம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த மஞ்சநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, காளிபட்டி, கொத்தயம், கள்ளிமந்தையம், 16-புதூர், தேவத்தூர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான மானாவாரி மற்றும் தண்ணீர் பாய்ச்சல் நிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

    இப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததன் காரணமாக இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆடு வளர்ப்பிற்காக தமிழ்நாடு, கேரளா, கர்நாடாக, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் உள்ள தலைச்சேரி ஆட்டு ரகங்களை விலைக்கு வாங்கி, ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பெரிய ஆடு ரூ.12 ஆயிரத்திற்கும், ஆட்டுகிடா ரூ.20 ஆயிரத்திற்கும் வியாபாரிகளால் வாங்கி வரப்பட்டு, வளர்க்கப்படுகிறது.

    ஆடுகள் ஆண்டுக்கு இருமுறை 2 முதல் 3 குட்டிகள் வரை ஈணும். வருடத்திற்கு சுமார் 80 குட்டிகள் வரை கிடைப்பதாகவும், ஒரு குட்டி ரூ.3 ஆயிரத்திற்கு ஆடு வளர்ப்பிற்காக வியாபாரி கள் மற்றும் பொதுமக்கள் வாங்கிச் செல்வதாக ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள காளிபட்டி தெற்கு தோட்டத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகவேல் என்பவர் கூறுகிறார்.

    ஆடு வளர்ப்பின் மூலம் கிடைக்கும் ஆட்டுச்சானம், தென்னை மற்றும் பல்வேறு பயிர்களுக்கு இயற்கையான உரமாக இடப்படுவதால், கணிசமான தொகை அதன் மூலம் கிடைப்பதாக விவசாயி கூறுகிறார்.

    ×