என் மலர்

  நீங்கள் தேடியது "Sethubavachatram accident"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சை மாவட்டம் சேது பாவாசத்திரம் அருகே கார் மோதிய விபத்தில் முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
  பேராவூரணி:

  தஞ்சை மாவட்டம் சேது பாவாசத்திரம் அருகே உள்ள சோலைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நாகூரான் (வயது 62).

  இவர் நேற்று முன்தினம் சோலைக்காட்டில் இருந்து சோமநாதன்பட்டினம் பகுதிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

  அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளில் சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு கார் நாகூரான் மீது மோதியது. இதில் பலத்த அடிபட்டு காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மணல்மேடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அங்கு சிகிச்சை பலனின்றி நாகூரான் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

  இந்த விபத்து பற்றி சேது பாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  ×