search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Senbhagavalli Amman Temple"

    • கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் தை அமாவாசை தினத்தை யொட்டி கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
    • மாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் தை அமாவாசை தினத்தை யொட்டி கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது.தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர், மாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து, உற்சவ மூர்த்தி சன்னதியில் வைக்கப்பட்டிருந்த பிரதான விலக்கில் தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, கோவில் வளாகம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த 10,008 தீபங்களை ஏற்றி பக்தர்கள் பத்ர தீப வழிபாடு நடத்தினர்.

    இதில் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ., முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் திருப்பதிராஜா, கோவில் நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.

    ×