என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seizure with car"

    • செட்டிப்பட்டி பாலம் அருகே ஓமலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீாசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • காருக்குள் சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்குகள் 20 மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம்-தருமபுரி நெடுஞ்சாலையில் ஓமலூரை அடுத்த செட்டிப்பட்டி பாலம் அருகே ஓமலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீாசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதி வேகமாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    காருக்குள் இருந்த தேனி மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்நத இளையராஜா (35), அல்லி நகரத்தை சேர்ந்த அருன்குமார் (24) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் காருக்குள் சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்குகள் 20 மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது.

    இதன் எடை 403 கிலோ என்பதும், அதன் மதிப்பு 1 லட்சத்து 66 ஆயிரதத்து 860 என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அந்த பாக்குகளையும், ரூ. 5 லட்சம் மதிப்பிலான காரையும் பறிமுதல் செய்தனர்.செட்டிப்பட்டி பாலம் அருகே ஓமலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீாசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

    ×