என் மலர்

  நீங்கள் தேடியது "SEIZURE OF SMUGGLED GOLD"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரூ.20 லட்சம் கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
  • வீட்டு உபயோக பொருட்களில் மறைத்து கடத்தி வந்தனர்

  திருச்சி:

  திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வழி நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு தினசரி விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அவ்வாறு கடத்தி வரும் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

  தற்போது வெளி நாடுகளுக்கு வியாபார காரணங்களுக்காக சென்று வருவதாக கூறி அங்கிருந்து தங்கத்தை கடத்தி வருவது மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் இந்த நாடுகளில் உள்ள தரகர்கள மூலமாகவும் தங்கம் கடத்தி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

  இந்த நிலையில் இன்று காலை துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது ஒரு ஆண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள்,

  அவரது உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் எடுத்து வந்த வீட்டு உபயோக எலக்ட்ரானிக் பொருட்களில் மறைத்து ரூ 20 லட்சம் மதிப்பிலான 20 துண்டுகளாக கொண்டுவந்த 385 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரிடம் மேலும் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  ×