என் மலர்
நீங்கள் தேடியது "Searching For Youngman"
- சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
- இந்நிலையில் வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமாகியுள்ளார்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது மூத்த மகளின் மகளான 13 வயது சிறுமியை வளர்த்து வந்தார். சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
கடந்த 4 மாதங்களாக சிறுமி பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் மூதாட்டி அவரை வெளியூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். ஆனால் அங்கு தாயாரிடம் சண்டையிட்ட சிறுமி மீண்டும் விஜயநாராயணத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமாகியுள்ளார்.
சிறுமியை காணாததால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி இதுகுறித்து விஜயநாராயணம் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் களக்காடு அருகே மூங்கிலடி வெப்பல் கீழத்தெருவை சேர்ந்த பால்துரை மகன் பிரதீப் (20) என்பவருக்கும், சிறுமிக்கும் செல்போன் மூலம் பழக்கம் இருந்து வந்ததும், அவர் சிறுமியை கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சிறுமியை கடத்தி சென்றதாக பிரதீப் மீது வழக்குப்பதிவு செய்து, அவரையும் சிறுமியையும் தேடி வருகின்றனர்.






