என் மலர்
நீங்கள் தேடியது "school student murder"
சோளிங்கர்:
சோளிங்கரில் போலீஸ் குடியிருப்பு பின் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் மகன் கார்த்தி (வயது 14). இவர், ஆர்.கே.பேட்டையில் உள்ள தனியார் மெட்ரிக்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவந்தார். நேற்று முன்தினம் மாலை கார்த்தி மாயமானார்.
நேற்று காலை சோளிங்கர் சந்தை பின்புறத்தில் உள்ள ஏரியில் மாணவன் கார்த்தி உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
சோளிங்கர் போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, மாணவன் கார்த்தி கொலை வழக்கு விசாரணையை சோளிங்கர் போலீசார் திடீரென திசை திருப்பியதால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆவேசமடைந்தனர்.
நண்பர்களுடன் கார்த்தி ஏரியில் குளிக்க சென்றார். அப்போது அங்கு கயிற்றுடன் இணைக்கப்பட்ட இரும்பு வாளியின் பிடி கிடந்தது. அதை அவர், தூக்கிப்போட்டு விளையாடினார். உயர் அழுத்த மின்கம்பியில் வாளிபட்டது.
இதில் மின்சாரம் பாய்ந்து கார்த்தி உயிரிழந்திருக்கலாம் என்று கூறினர். இதையறிந்த மின்வாரிய அதிகாரி ஒருவர் மாணவன் கார்த்தி உடலை பார்வையிட்டு போலீஸ் நிலையம் வந்தார். மின்சாரம் தாக்கி மாணவன் கார்த்தி இறக்கவில்லை.
மாணவனின் உடலில் உள்ள காயங்கள் மின்சாரம் தாக்கியதில்லை. வழக்கை திசை திருப்ப வேண்டாம் என போலீசாரிடம் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, மாணவன் கொலை தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் 3 பேரை பிடித்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சிறுவர்கள் தான் மாணவன் கார்த்தியுடன் கடைசியாக இருந்தனர்.
எனவே, கார்த்தி கொலை தொடர்பாக சிறுவர்களுக்கு ஏதாவது தெரிந்திருக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.