search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "School Management team"

    • பள்ளி மேலாண்மை குழுவின் பொறுப்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
    • 3 முதல் 5 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டது.

    உடுமலை :

    அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு அமைத்து, அவர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை கல்வித்துறை வழங்கியுள்ளது.குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட அரசுப்பள்ளிகளைச்சேர்ந்த பள்ளி மேலாண்மை குழுவினருக்கு சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியர் பயிற்றுனர் சுமதி பயிற்சியளித்தார்.

    பள்ளி மேலாண்மை குழுவின் பொறுப்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பள்ளி மேம்பாட்டு திட்டம் தயாரித்தல், பள்ளி வளர்ச்சிக்கான துணைக்குழுக்கள் அமைத்தல், மாணவர் சேர்க்கை மற்றும் இடை நிற்றலை தவிர்த்தல், குழு கற்றல் மேம்பாட்டு குழு, மேலாண்மை குழு, கட்டமைப்பு குழு உள்ளிட்ட குழுக்களில், 3 முதல் 5 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டது.பள்ளி தலைமையாசிரியர் கோப்பெருந்தேவி பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

    ×